விவசாயிகள் படுகொலை: மௌனம் காக்கும் பிரதமர் மோடி – கொந்தளித்த ராகுல்!

பிரதமர் மோடி கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தால் தான் கோபப்படுவார் என்றும், விலைவாசி உயர்வு , வேலையின்மை , விவசாயிகள், பா . ஜ . க ., வினர் கொல்லப்பட்டால் அமைதியாக இருப்பார் எனகாங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.,வினர் காரை விட்டு மோதியதில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் என 5 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகளின் பதில் தாக்குதலில் பா.ஜ.க., நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மகனின் கார் ஓட்டுநர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பிரதமர் நரேந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், பிரதமர் எவற்றிற்கெல்லாம் மவுனமாக இருப்பார், எவற்றிற்கெல்லாம் கோபப்படுவார் என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

விலைவாசி, பெட்ரோல் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.,வினர் கொல்லப்படுதலுக்கு பிரதமர் அமைதியாக இருப்பார். கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைந்தால், அவரது நண்பர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் பிரதமர் வெகுண்டெழுவார் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!