கத்தோலிக்க மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளுக்கு தண்டனையை வழங்கி, கத்தோலிக்க மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அரசியல் வாழ்வில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும், தனக்கு அது குறித்து மிகுந்த வேதனை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவை பௌத சங்கத்தில் நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து, உயர் நீதிமன்றத்தில் தற்போது 20 இற்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் அது குறித்து தனக்கு முழுமையாக கருத்துக்களை வெளியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த நபர்களுக்கு, நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடாகும் எனவும்,அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தனது ஆட்சிக்காலத்தில், இழப்பீடு வழங்கியமை, மதத் தலங்கள் முழுமையாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டவை போன்றை விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!