ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் – அமைச்சர் மங்கள கண்டனம்!

நியூயோர்க் டைம்ஸுக்கு செய்திகளை அறிக்கையிட்ட இரண்டு இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அனைத்து அச்சுறுத்தல்களையும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முழுமையாக பொறுப்பெற்க வேண்டிய அதேநேரம் மீண்டும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இவ்வாறானதொரு செயன்முறை கட்டவிழ்க்கப்பட மாட்டாதென அவர் உறுதி வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுக்கொண்டார்.

அத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கள் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்ட்டு தவறிழைத்தவர்களுக்கு எதிராக பயமோ பாரபட்சமோ இன்றி உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வெண்டுமென்றும் அவர் கூறினார்.

மேலும் தமது தொழிலை சரிவர செய்த ஊடகவியலாளர்கள் மீது ஒன்றிணைந்த எதிரணி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த சில தனிப்பட்ட நபர்கள் திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் தன்னை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!