கனடாவில் இந்திய பாடகர் மீது குவிந்துள்ள புகார்கள்: வெளியான காரணம்!

பிரபல பஞ்சாபி பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலகத்தார் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (Parmish Verma (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர், இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார்.
    
பர்மிஷ், கனேடிய அரசியல்வாதியும், லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளருமான கீத் கிரெவாலை (Geet Grewal) கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் செய்துகொண்டார்.

அவரது திருமணம் இந்திய முறைப்படி சர்ரேயில் வெகுவிமரிசையாக நடைபெற்ற நிலையில், மறுநாள் அதிகாலை வரை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அக்கம்பக்கத்தில் வசிப்போர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!