நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்ப பிரிவு கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு கல்வி செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய அரசாங்கம் நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
முதற்கட்டமாக 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட அனைத்து பாடசாலைகள் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இதன்படி, நாட்டிலுள்ள சகல அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தொடக்கம் 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
மேலும், இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.

நவம்பரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசிரல் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் பிற்போடக்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு காரணமாக பாடசாலைகளுக்குச் செல்ல முடியாதுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, தொலைவில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்ல விரும்பாத மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.

மேலும், அவர்கள் இயலுமான ஆடைகளை அணிய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரியுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள கோரிக்கைக்கான போராட்டம் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் என அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று சகல ஆசிரியர்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கெப்பிட்டல் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!