தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை: முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவிற்கு வந்துள்ளது. கடந்த இரண்டு வாரமாக தமிழ்நாடு முழுக்க இதனால் பரவலாக மழை பெய்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
    
இதனால் தமிழ்நாட்டில் இன்றில் இருந்து தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் மழை அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அக்டோபர்
பொதுவாக அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அதேபோல் இந்த வருடமும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி உள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை சமயத்தில்தான் தமிழ்நாட்டில் புயல் தாக்குதல்கள் அதிகம் ஏற்படும். இதனால் இந்த முறையும் வங்கக்கடலில் புயல் மையம் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு
இந்த முறையும் தமிழ்நாட்டில் வருகிற நாட்களில் தீவிர கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 46-47 சதவிகித மழை தேவையை வடகிழக்கு பருவமழைதான் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீட்டிங்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். பல்வேறு அதிகாரிகள், மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், தலைமை செயலாளர் வெ இறையன்பு ஆகியோர் இந்த மீட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளனர். மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. காணொளி காட்சி மூலம் இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

ஆலோசனை
அதேபோல் புயல் ஏற்பட்டால் என்ன மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை இன்று செய்ய உள்ளனர். பல்வேறு ஏரிகள், குளங்களை வேகமாக தூர்வாருவது குறித்தும் இன்று முடிவு செய்யப்படும் என்கிறார்கள். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக வைகை ஆற்றுக்கு நீரை வெளியேற்றுவது குறித்தும் இன்று ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!