சேதன உரப்பாவனையின் நன்மை குறித்து சர்வதேசத்திடம் பேசிய ஜனாதிபதி..!

பௌத்த போதனைகளை மையமாக கொண்ட நாடான இலங்கைக்கு மனித தேவையுடன், சுற்றாடல் சமநிலையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளதாக ஜளாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

“மனிதன், பூமி மற்றும் செழிப்பு: காலநிலை செயல்முறையை மேம்படுத்துதல்” என்னும் தொனிப்பொருளில் அரச தலைவர்களின் கலந்துரையாடலில் காணொளி தொழிநுட்பம் ஊடாக இணைந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


காலநிலையை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தடைப்பட்டுள்ள நிலையில், துரிதமாக முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, பூகோளத்தின் ஆராக்கிய தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அபிவிருத்தி அடைந்த நாடுகள் அர்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது எடுத்துக்காட்டியுள்ளார்.

காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு, வளர்ந்துவரும் நாடுகள் வே ண்டி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், 2030 ஆம் ஆண்டளவில் நைட்ரஜன் வெளியேற்றத் அரைவாசியாக குறைக்கும் நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை மையமாக கொண்டு செயற்கை உரப்பாவனையை குறைத்து சேதன உரபாவனைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளதாகவும், இதனூடாக நைட்ரஜன் மாசுபாட்டை குறைக்க பெரும் உதவியாக இருக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலக்கரி இல்லாத, எரிசக்தியை மையமாக கொண்டு செயற்படும் நாடாக இலங்கை காணப்படுவதை இட்டு தாம் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!