உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படத்தயார் – பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அரசாங்கம் தமது கடமைகளை நிச்சயமாக நிறைவேற்றுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடு வழங்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமது கடமைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள போதும் குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

அத்துடன், அனைத்து மக்களும் மதம், இனம் பேதமின்றி செயற்படுவதனை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
Like this:

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!