கறுப்புப் பட்டியலில் சேர்த்த சீனத் தூதுவரை அழைத்து கண்டிக்க வேண்டும்!

மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனத் தூதரகம் எடுத்த முடிவு தவறானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனைச் சவாலுக்குட்படுத்துவது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    
அதேவேளை, சீனத்தூதுரகத்தின் இந்த நடவடிக்கையைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் வன்மையாகக் கண்டித்துள்ளது. சீனத்தூதுவரை அழைத்து இது தொடர்பில் விளக்கம் கோர வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!