திடீரென 1500 மாணவர்களை விடுதிகளில் அடைத்து வைத்த சீன அரசு!

சீனாவில் உள்ள க்ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள டலியான் நகரில் இருக்கும் ஷீவாங்கே பல்கலைக்கழக நகரில் இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. இதன்பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது.

இதேவேளை தற்போது டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் இருக்கும் ஏராளமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை தனிமைப்படுத்த கடந்த (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்களுக்கு காணொளி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!