மக்களுக்கு மானிய விலையில் சேவைகளை வழங்கக்கூடாது – எஸ்.பி.திஸாநாயக்க

மின்சாரம், சமையல் எரிவாயு, குடிநீர் என்பன மானிய விலையில் வழங்கப்படுவதை தனிப்பட்ட ரீதியில் தான் எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
மின்சாரம், சமையல் எரிவாயு, பெட்ரோல், குடிநீர் என்பவற்றை மானிய விலையில் வழங்குவதை நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கின்றேன். ஏன் நான் இப்படி கூறுகிறேன்?. நாம் பயன்படுத்தும் குடிநீருக்கு வேறு ஒருவர் ஏன் பணம் செலுத்த வேண்டும்?.

மானியம் வழங்குவது என்பது, இன்னுமொருவர் அதனை செலுத்துகிறார் என்றே அர்த்தம். நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு வேறு ஒருவர் ஏன் பணத்தை செலுத்த வேண்டும்?. அது சரியா?.

நஷ்டமின்றி இலாபம் கிடைக்கின்றது என்றால் பரவாயில்லை. இது எமக்கு பெரிய சுமை. மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் மானியங்களும் இரத்துச் செய்யப்பட வேண்டும் என எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!