இருளில் மூழ்காது இலங்கை: அமைச்சர் கம்மன்பில

எண்ணெய் சுக்திகரிப்பு நிலையத்தைத் தற்காலிகமாக மூடியதாலும், மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டமையாலும் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

எனவே, நாடு இருளில் மூழ்கும் எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டே மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது எமது நாட்டுக்கு நன்மையாகவே அமையும். இதன்மூலம் அந்நியச் செலவணியை முறையாகப் பேணமுடியும்.

போராட்டங்கள் மூலம் டொலர் கிடைக்குமானால் நானும் திறைசேரிக்கு முன்னால் சென்று போராடத் தயாராகவே இருக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதை தொடர்ந்து நாட்டு மக்கள் பல்வேறு வதந்திகளுக்கு முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!