வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று நாடாளுமன்றில்…

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் நாடாளுமன்றத்தில் ஏழு நாட்களாக நடைபெறும் விவாதம் இன்றுடன் நிறைவடைகிறது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பையடுத்து நாளை 23 ஆம் திகதி முதல் குழு நிலை விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது..

வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!