பொது இடங்களில் கட்டாயமாகும் தடுப்பூசி அட்டை -புதிய தீர்மானம் நிறைவேற்றம்!

எதிர்காலத்தில் பொது இடங்களில் கொரோனா  தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு   தீர்மானிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தலைமையில் இன்று இடம்பெற்ற இடம்பெற்ற  கொரோனா தடுப்பு  தேசிய செயலணியின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தடுப்பூசி  பெறாதவர்கள் எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதனை  தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து   கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!