ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வில் வெளிவந்த உண்மை!

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட 4.2 மடங்கு அதிகமாக பரவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தன்மை குறித்து, பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    
இந்நிலையில், ஜப்பானில் இந்த வைரஸ் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், டெல்டா வைரஸை விட, ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவும் தன்மை கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து இந்த ஆய்வில் பங்கு பெற்ற சுகாதார அறிவியல் பேராசியரும் தொற்று நோயின் போக்கை கணிதவியல் மூலம் கணிப்பதில் நிபுணருமான ஹிரோஷி நிஷியுரா கூறுகையில், தென் ஆப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கடந்த மாதம் 26-ஆம் திகதியில் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த நோயாளிகளின் உடலில் தொற்றியிருந்த ஒமைக்ரான் கொரோனாவின் மரபணு உருமாற்றங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

அதில், முந்தைய கொரோனா பரவலை விட அதிக பரவும் தன்மையும் இயற்கையிலேயே உருவான நோயெதிா்ப்பு சக்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பாற்றல் ஆகியற்றை மீறும் தன்மையும் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா வகையைவிட ஒமைக்ரான் வைரஸின் தன்மைகள் 4.2 மடங்கு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!