மங்கள எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்திய போது நாங்கள் கேலி செய்தோம்: டளஸ் அழகப்பெரும

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்திய போது, தான் உட்பட அன்றைய எதிர்க்கட்சியினர் அதனை அவதூறுக்கும் கேலிக்கும் உட்படுத்தியதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எரிபொருள் விலைகளுக்கு விலை சூத்திரம் ஒன்று அவசியம் என தற்போதைய எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது குறித்து அடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எரிபொருளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!