எரிவாயு நிறுவனங்களை மூடி விட நேரிடும்! – அமைச்சர் எச்சரிக்கை

எரிவாயு நிறுவனங்களை மூடி விட நேரிடும் என நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். தேவை ஏற்பட்டால் நிறுவனங்களை மூடி விடவும் தயங்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்தாது மெத்தனப் போக்கில் எரிவாயு நிறுவனங்கள் செயற்பட்டால் அவற்றை மூடுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்வரும் மூன்று மாதங்களில் இந்த நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவினால் எரிவாயு சேர்மானத்தில் பிரச்சினை காணப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!