காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதற்கு அவர் ‘தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதிருந்தே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக பேசப்பட்டு வந்தன.
    
கடந்த 11ஆம் தேதி அவர் பாஜகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. அதற்கு அவர், நான் எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை. என்று ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, வருகின்ற பஞ்சாப் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவரின் அந்த விளக்கத்தில், “அனைத்து அரசியல் கட்சிகளிலும் எனக்கு ஆட்களை நன்றாக தெரியும். நான் ஒரு அரசியல் கட்சியில் இணைவதாக இருந்தால், அதனை நான் முன்கூட்டியே உங்களுக்கு தெரிவித்து விடுவேன்.

நான் எனது பஞ்சாப் மாநிலத்திற்கு நான் சேவை செய்ய விரும்புகிறேன். அதனை அரசியல் மூலமாகவோ அல்லது வேறு வழிகள் மூலமாகவும் செய்ய திட்டமிட்டுள்ளேன். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை” என்று ஹர்பஜன்சிங் தந்த அந்த விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!