தவறிழைப்பவர்களை ஜனாதிபதி தண்டிப்பதில்லை!

தவறிழைத்த அதிகாரிகள் எவரையும் ஜனாதிபதி தண்டிப்பதில்லை என ஓமல்பே சோபித தேரர், தெரிவித்தார். நாட்டில் இடம்பெறும் அனைத்துத் தவறுகளுக்கும் அதிகாரிகளையே ஜனாதிபதி குற்றம்சுமத்துகிறார். அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் கண்ணீரில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம் நான் நேரடியாகவே கேட்கிறேன். தவறிழைத்த எத்தனை அதிகாரிகளை நீங்கள் தண்டித்துள்ளீர்கள்?

காஸ் அடுப்புகள் வெடிக்கின்றன. சீனி, பால்மா உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே இத்தவறுகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

இவர்களை ஜனாதிபதி தண்டித்தாரா? இல்லை. தவறிழைப்பவர்களை தண்டிப்பது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கடமை. எனவே தவறிழைத்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு விரைவாக ஜனாதிபதி தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!