சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்குத் தீர்மானம்

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் கொள்வனவிற்கான அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமையை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் இவ்வாறு சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதன் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என வலுசக்தி அமைச்சு உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!