தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: ஒருவர் கைது!

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தின் பழமையான பிரிவில் இந்த தியானது தொடங்கியது.
    
மூன்றாவது மாடியில் உள்ள அலுவலகங்களில் அதிகாலை தொடங்கிய தீ, தேசிய சட்டமன்ற அறைக்கும் பரவியது. இதனால், மேற்கூரை இடிந்து விழுந்து, கட்டிடத்தின் ஒரு முழுத் தளமும் எரிந்து நாசமானது. உறுப்பினர்கள் அமரும் அறை முழுவதும் எரிந்து சாம்பலானது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தில் அரிய புத்தகங்களின் தொகுப்பும், ஏற்கனவே சேதமடைந்திருந்த முன்னாள் ஆப்பிரிக்க தேசிய கீதமான Die Stem van Suid-Afrika (The Voice of South Africa) அசல் பிரதியும் உள்ளன.

கட்டிடத்தில் பெரும் தீப்பிழம்புகள் பரவியதையடுத்து, பெரும் புகை மூட்டம் காணப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வளாகத்தின் இரண்டு தனித்தனி பகுதிகளில் இரண்டு தீ பரவியதால், தீயை அணைக்க வீரர்கள் கடுமையான போராடியதாகக் கூறப்படுகிறது. தியானித்து முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.
விபத்து தொடர்பாக கட்டிடத்தில் இருந்த 51 வயதுடைய நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன், தீ விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவர் விசாரணைக்கு பின் செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!