போராட்டம் ஒன்றில் ரஞ்சனுக்கு கிடைத்துள்ள வெற்றி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) சிறையில் இருந்தவாறு இணையத்தளம் மூலம் உயர் கல்வியை கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கையை ரஞ்சன் ராமநாயக்க விடுத்திருந்ததுடன் நீதியமைச்சரின் அனுமதியுடன் அதற்கான அனுமதிக்கடிதத்தை வழங்கியதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மடிக் கணனி ஊடாக இணையத்தளத்தை பயன்படுத்தி வெளிவாரி பட்டப்படிப்புக்கான விரிவுரைகளில் கலந்துக்கொள்ள ரஞ்சனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் படிக்கும் துறைசார்ந்த நூல்கள் உள்ளிட்டவற்றை வெளியில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் நடத்தப்படும் விரிவுரைகளில் அவர் கலந்துக்கொள்வது சிறைச்சாலை புனர்வாழ்வு அதிகாரி ஒருவரின் முன்னிலையில் நடைபெறும் எனவும் உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!