சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையும் இலங்கை – பசிலுக்கு வந்த இரகசிய அறிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் தமக்கு இரகசிய அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தன்னால் வெளியிட முடியவில்லை எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலக வங்கியின் பிராந்திய தலைவர் ஜனாதிபதியையும் தம்மையும் நேற்று சந்தித்ததாக நிதி அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நன்கொடை வழங்கும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டதுடன், கலந்துரையாடல்களை ஏனைய அமைச்சர்களிடம் கையளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!