உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்!

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
    
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், பாராளுமன்றத்தை மூடுவதற்குப் பதிலாக, கூட்டத் தொடர்களை அதிகரித்து, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாட்டின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் பிரச்சினைகளை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது எனவும், அரசாங்கம் இந்த வாரத்தில் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!