நாட்டு மக்களுக்கு தொடரும் சோகம் – அமைச்சர் வெளியிட்ட தகவல்

அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள போது அதன் மூலம் பொருட்களின் விலை குறையும் நன்மை மக்களுக்கு கிடைக்காதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து வெளியிட்டிருந்தார்.

ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பொருட்கள் கடைகளில் உள்ளது. அதில் விலை குறைப்பு பெறுவது கடினம். புதிதாக பொருட்கள் இறக்குமதி செய்து அதன் மூலம் விலை குறைப்புகள் செய்யப்படலாம். ஆனால் அதற்கு தாமதம் ஏற்படும்.

அரசாங்கத்திற்கு செய்ய முடிந்ததனை முழுமையாக செய்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு சலுகை கிடைக்கும் வகையில் பொருட்களின் விலை குறைய சில காலங்களாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!