உரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான – நடவடிக்கைகள் ஆரம்பம்

சிறு போகத்திற்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில், ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், உரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்காமையினால் உற்பத்திகள் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, எதிர்வரும் சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வது குறித்தும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறு போகத்திற்கு தேவையான சேதனப் பசளையியை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், இரண்டு அரச நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!