
இதன்படி நீர்ப்பாசன அமைச்சின்செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமரின் செயலாளர் காமினிசெனரத் நாளையதினம் ஜனாதிபதியின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர்கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவிவகித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் அலுவலக தலைமை அதிகாரியாகவும் காமினி செனரத் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள அநுர திஸாநாயக்க, கல்வி அமைச்சு, உட்பட பல்வேறு அமைச்சுக்களின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!