நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 597,035 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 688 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 97 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.

 இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 68 ஆயிரத்து 373 ஆக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

 இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 ஆயிரத்து 444 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கதகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து218 ஆக உயர்வடைந்துள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!