ஒரே ஆண்டில் 33,300 கொலைகள்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரபல நாடு!

மெக்சிகோவில் கடந்த 2021-ஆம் ஆண்டு சுமார் 33,300 கொலைகள் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு என அதிர்ச்சியூட்டும் தரவுகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் ஆரம்ப தரவுகளின்படி, வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கொலைகளின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டில் பதிவானதை விட 2021-ல் 3.6 விழுக்காடு குறைந்துள்ளன.
    
2020-ஆம் ஆண்டு 34,554 கொலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த ஆண்டு எண்ணிக்கை சற்று குறைந்து 33,308 கொலைகள் பதிவாகியுள்ளன.

அதற்கு முன் 2019-ஆம் ஆண்டு 34,690 கொலைகளும், 2018-ஆம் ஆண்டு 33,739 கொலைகளும் பதிவாகியுள்ளன.

இந்த தரவுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மெக்ஸிகோவில் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கைக்கு தொடர்ந்து குறைந்துள்ளது தெரிகிறது.

இது, அந்நாட்டு ஜனாதிபதிக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில், 2018-ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ஜனாதிபதியாக பதவியேற்ற Andres Manuel Lopez Obrador, நாட்டில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அவர் கூறியதை செய்து காட்டியுள்ளார். அந்நாட்டில் போதைப்பொருள், குண்டர் கும்பல் வன்முறைகள் குறைந்துள்ளன.

இந்த தரவுகளை வெளியிட்ட மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சர் Rosa Icela Rodriguez, தொடர்ந்து ஈராண்டுகளாக கொலைகளின் எண்ணிக்கை குறைந்துவருவதை சுட்டிக்காட்டினார்.
அதே சமயம், பெண்களுக்கு எதிரான கொலை, மிரட்டிப் பணம் பறிப்பது, மானபங்கம், கொள்ளை ஆகியவை தொடர்பான குற்றங்கள் மெக்ஸிகோவில் அதிகரித்துள்ளன.

மேலும், மெக்சிகோவில் காணாமல் போவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிக்கோ வன்முறையின் உச்சத்தை நோக்கிச் செல்வதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
அதேபோல், இந்த ஆண்டு கொலைச் சம்பவங்கள் குறைந்ததற்குக் கிருமிப்பரவல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அமைப்புகள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!