சர்வதேச நாயண நிதியத்தின் உதவியை நிராகரிக்கவில்லை! அரசாங்கத்தின் பிந்திய அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை முழுமையாக நிராகரிக்கவில்லை.

எனினும் தற்போதைய நிலையில் கடன்கள் மீளமைத்துக்கொள்ளும் பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளமைக்க, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்று பல்வேறு தரப்புக்களும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருங்கிய உறவைப்பேணுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை 16 தடவைகள் பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களும் 2008 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களும், நாணய நிதியத்திடம் இருந்து கடனாகப் பெறப்பட்டுள்ளன.

எனவே எதிர்காலத்தில் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் எந்த நேரத்திலும் நிராகரிக்கவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!