1 லட்சம் ரூபாயை அரசு பள்ளிக்கு நன்கொடையாக அளித்த இளநீர் விற்கும் தமிழ்ப்பெண்: மோடி பாராட்டு!

திருப்பூர்உடுமலைப்பேட்டையைசேர்ந்தஇளநீர் விற்கும் பெண்ணை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன்’ என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டுக்கான முதல் நிகழ்ச்சி இன்று 11.30 மணி அளவில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.
    
வழக்கமாக 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர அஞ்சலி செலுத்த ராஜ்காட் சென்றதால் நேரம் மாற்றம் செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.

தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் இளநீர் விற்கும் பெண் தாயம்மாளை வெகுவாக பாராட்டினார். அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்று தனது வாழ்க்கையை நடத்தி வந்தது.
பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும் தாயம்மாள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படித்து வந்தார்கள்.

பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டது. தாயம்மாள் அந்த கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்து போது அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைபட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் அவர்கள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது.

இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்த தாயம்மாள், தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படி செய்ய மிகப்பெரிய மனது வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!