சசிகலா சிறை விவகாரம்: விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பல முக்கிய உண்மைகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான வி.கே.சசிகலாவுக்கும் அவரது உறவினரான இளவரசிக்கும் பெங்களூரில் உள்ள அப்போதைய மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் ஆர் அனிதா ஆகியோர் முன்னுரிமை அளித்தது, ஊழல் தடுப்புப் பிரிவு (ஏ.சி.பி) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாக, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
    
அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்தபோது இந்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், “சசிகலா மற்ற குற்றவாளிகளிடம் இருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளார். ஐந்து சிறைகளுடன் கூடிய பெண்கள் பிரிவு அவருக்கு வழங்கப்பட்டது. குற்றவாளிகள் அவருக்கு உணவு தயாரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அவரை சந்திக்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

மேலும், ஒரு கட்டில் மற்றும் படுக்கை அவருக்கு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் கிருஷ்ண குமார் அறிந்திருந்தும், உயர் அதிகாரிகளிடமோ அல்லது அரசிடமோ அவர் தெரிவிக்கவில்லை.”, என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விசாரணையில், அப்போதைய சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி எச்.என் சத்தியநாராயண ராவ் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!