டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.
    
தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ள நீதிமன்றம் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளது.
அதன்படி டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார் உரிமங்கள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!