சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் போராட்டம்

பல்வேறு சுகாதார தொழிற்சங்கள் இணைந்து  முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இவ்வாறு சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை தொடர்ந்து முன்னெடுத்துள்ளன

7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்களின் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தாதியர்கள், வைத்திய ஆய்வு கூட நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட  18 தொழிற்சங்கள் இணைந்து  இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு முன்பாக சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன் காரணமாக சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு நகர மண்டபப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!