உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் விடுவித்து விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படுமென முன்னதாக அறிவிக்கப்பட்டது.  

இதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நாமல் பலாலே, ஆதீத்ய பட்ட நெத்தி  மற்றம் மொஹமட் இஷார்தீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இந்த நிலையிலே,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து குறித்த இருவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரித்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவடைந்தன.
இந்த நிலையிலே, குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ  ஆகியோரை விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!