பரீட்சை மோசடிகள் குறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஆரம்பிக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான பரீட்சை மோசடிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்து இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரம் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேர முகாமைத்துவம் என்பவற்றில் சேர்க்கப்பட்ட புதிய தொழில்நுட்பம் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வலய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!