ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிலையான எரிசக்தி அதிகார சபைக்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  நிலையான எரிசக்தி அதிகார சபைக்கு  இன்று  திடீர் விஜயமொன்றை  மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கொழும்பு 07   ஆனந்த குமாரசுவாமி மாவத்தை பகுதியில்  அமைந்துள்ள நிலையான எரிசக்தி அதிகார சபையினை  இன்று முற்பகல்  பார்வையிட்டுள்ளார்

மின் உற்பத்திக்கான நீர், சூரிய ஒளி மற்றும் காற்று  போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுபீட்சத்தின் நோக்கு  கொள்கை திட்டத்திற்கமைய 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த மின் உற்பத்தியில் 70 வீதம் புதுப்பிக்கத்தக்க சக்தியினை பயன்படுத்துவதனை அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படட்டுள்ளது.

அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும்  ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது   கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!