இந்திய மாணவர்களை தாக்கிய உக்ரைன் ராணுவம்?

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் கனல்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக ஷேஹினி எல்லை பகுதிக்கு வந்த இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்குவதல் நடத்துவதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது.

ரஷ்யா உக்ரைன் இடையே இன்று ஐந்தாவது நாளாக போர் தொடரும் நிலையில், பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.

    
இது ஒருபுறம் இருக்க, அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அந்தவகையில், நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உக்ரைனில் தங்கி கல்வி பயின்று வந்த நிலையில் அவர்களை வெளியேற்றும் பணியில் இந்திய தூதரகம் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்திய மாணவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் தூதரக அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் எந்த ஒரு பகுதிக்கோ, அல்லது பிற நாட்டுக்கோ செல்ல வேண்டாம் என உத்தரவிடபட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவின் எதிரான வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணித்ததை தொடர்ந்து, உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்காக ஷேஹினி எல்லை பகுதிக்கு வந்த இந்திய மாணவர்கள் மீது உக்ரைன் ராணுவம் தாக்கி மீண்டும் உக்ரைனுக்குள் செல்லுமாறு கட்டாய படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்போன வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி, உக்ரைனில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களை கவலை அடைய வைத்துள்ளது.
இணையத்தில் பரவிவரும் இத்தகவல் மற்றும் காணொளி காட்சியின் நம்பத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!