“இந்தியாவின் வலிமையால் தான் இந்தியர்களை மீட்க முடிகிறது” – பிரதமர் மோடி!

போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக் கொண்டே இருக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு `ஆப்ரேசன் கங்கா’ திட்டத்தை அறிமுகப்படுத்தி நான்கு மத்திய அமைச்சர்களை நியமித்திருக்கிறது.

நேற்றைய தினம் இந்தப் போரில் இந்தியாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    
இந்த நிலையில், உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி, சோன்பத்ராவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால்தான், உக்ரைனிலிருந்து இந்தியக் குடிமக்களை வெளியேற்ற முடிகிறது.

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு ஒருபோதும் கைவிடாது. ஆயுதப் படைகளின் வீரம் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ ஆகியவற்றைப் பற்றி கேள்வி கேட்பவர்களால் நாட்டை வலிமையாக்க முடியாது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!