மாகாணசபை தேர்தல் கடந்த காலங்களில் தாமதமடைந்தமைக்கு கூட்டமைப்பே முக்கிய காரணம் என குற்றச்சாட்டு

மாகாணசபை தேர்தல்   கடந்த காலங்களில்   தாமதமடைந்தமைக்கு  தமிழ்  தேசியக் கூட்டமைப்பினர்  மிக  முக்கிய காரணம் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்வியங்காடு மட்பாண்ட கிராமத்தினை உள்வாங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று  முற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  அங்கஜன் இராமநாதன்  பிரதமர விருந்தினராக பங்கேற்றிருந்துடன் பயனாளர்களுக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்துள்ளார்.

 குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை குறிப்பிட்’டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!