நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள புதிய தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  

நாட்டின் கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள 6 உள்ளுர் சீமெந்து தொழிற்சாலைகளில்  குறித்த புதிய தொழிற்சாலை இன்று முதல் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.  

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில்புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னெடுக்கப்பட்டது.

 இதேவேளை குறித்த புதிய சீமெந்து ஆலையின் மூலம் வருடத்திற்கு 2 தசம் 4 மில்லியன் மெட்ரிக் டொன் சிமெந்தினை உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் தற்போது உள்ளுர் சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய  வகையில் புதிய சீமெந்து தொழிற்சாலை அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!