பேரறிவாளனை விடுவிக்க எந்த ஆட்சேபமுமில்லை – ராகுல்

இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. இருப்பினும் குறித்த இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியில் தடுத்து வைத்துள்ளது.

இந் நிலையில் பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு தொடர்பில் ரஞ்சித் குறிப்பிடுகையில்,

டெல்லியில் ராகுல் காந்தியுடனான சந்திப்பின்போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசினோம் அப்போது ராகுல் காந்தி பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என கூறியதாக தெரிவித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனை காலங்கள் முடிந்தபிறகும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படாமல் இருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!