புதுப்புதுப் பிரச்சினைகளை உருவாக்கி உபத்திரவம் தராதீர்கள்

ஒரு பெரிய கோட்டை சிறிய கோடாக மாற்றுவ தென்றால், அதற்குப் பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டைக் கீறுதல் என்பது ஒரு வகை யான முறை.
இத்தகைய முறைகள் அரசியலில் சர்வ சாதாரணம் எனலாம். அதிலும் இலங்கை அரசியலில் இதற்குப் பஞ்சமே இல்லை.

தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வு தாருங்கள் என்று கேட்க, அவர்கள் கேட்கின்ற தீர்வை வழங்காமல், தீர்வு கேட்கின்ற மக் களை வேறு வேறு பிரச்சினைகளுக்குத் திசை திருப்பி விடுகின்ற முயற்சியில் இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வரு கின்றனர்.

இதில் நல்லாட்சி இன்னும் உச்சம் என்று கூறுமளவிலேயே நிலைமை உள்ளது.
இராணுவத்துக்கென காணி அபகரிப்பது, சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்களை நிறுவுவது, நயினாதீவுக் கடலில் 60 அடி புத்தர் சிலை நிறுவப் போவதாக அறிவிப்பது, வடம ராட்சிக் கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பதற்கு சிங்கள மீனவர்களை அங்கு குடியமர்த்து வது, விகாரைகளை ஆங்காங்கே அமைக்க முற்படுவது,
யாழ்.பல்கலைக்கழகத்தில் கண்டி நடனத்தை அரங்கேற்றத் திட்டமிடுவது எனப் பிரச்சினைகளைப் புதிது புதிதாக உருவாக்கி, அதன்மீது தமிழ் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி; இனப்பிரச்சினைக்கான தீர்வில் இருந்து இலாபகமாகத் தப்பித்துக் கொள்வது என்ற இராஜதந்திரத்தில் நல்லாட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணக் கோட் டைக்குள் இராணுவத்தை இருத்துவது என்ற இன்னொரு பிரச்சினை கிளப்பி விடப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டையின் தற்போதைய நிர்வாகம் தொல்பொருள் திணைக்களத்துக் குட்பட்டுள்ளது.
“தொல்லியல்” என்ற அடிப்படையில் யாழ்ப் பாணக் கோட்டையின் நிர்வாகம் தொல் பொருள் திணைக்களத்துக்குட்பட்டிருந்தாலும் உண்மையில், யாழ்ப்பாணக் கோட்டையின் முழு நிர்வாகமும் வடக்கு மாகாண சபைக்குட் பட்டு, யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாகத் துக்குள் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.

இதுபற்றி பல தடவைகள் இவ்விடத்தில் நாம் பிரஸ்தாபித்திருந்தோம்.
எனினும் இது விடயத்தில் எங்களில் எவ ரும் கவனம் செலுத்தவில்லை.
யாழ்ப்பாணக் கோட்டை யாழ்ப்பாண மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்தால், பொதுமக்கள் கோட்டையைப் பார்ப்பதற்கென ஒரு சிறு கட்டணத்தை விதிப்பதன் மூலம் கிடைக் கின்ற வருமானம் யாழ்ப்பாண மாநகரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதற்குப் போதுமான தாக இருந்திருக்கும். ஆனால் இவை சாத்திய மாகவில்லை.

பரவாயில்லை என்றால், இப்போது படையி னரைக் கோட்டையில் குடியமர்த்த கடும் பிரயத் தனம் நடக்கிறது எனும்போது எப்படியயல்லாம் சிங்களப் பேரினவாதிகளும் அவர்களின் இன வாதத் தீக்கு எண்ணெய் ஊற்றும் சிங்களப் புத்திஜீவிகளும் செயற்படுகின்றனர் என்பதை இனியாவது நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் புரிதல் அரசுடன் ஒரு இறுக்கமான போக்கைக் காட்டுவதாக இருப்பது அவசியம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!