தேசிய அரசாங்கத்திற்கு வாய்ப்பே இல்லை! அடியோடு மறுத்தார் மஹிந்த

தேசிய அரசாங்கம் அமைக்கும் உத்தேசம் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். 

தேசிய அரசாங்கம் நிறுவப்பட உள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடமையாற்றுவார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

என்ற போதும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவுதல் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தெரியவருகிறது.

இதேவேளை நேற்றைய தினம் நாட்டில் பல பொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்திருந்தன. 

இந்த நிலையில் அதன் தாக்கம் காரணமாக இன்றைய தினமும் விலை அதிகரிப்பு பட்டியல் நீளமாகும் சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!