ராஜபக்ச குடும்பத்தில் சகோதர பாசமில்லாத நபர்! அதிகாரத்தை கைப்பற்ற மோசமான திட்டம் – கம்மன்பில தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாக கொலை செய்து அதிகாரத்தை கைப்பற்றவே பசில் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, பசிலுக்கு ஜனாதிபதியாகும் நோக்கம் இப்போதும் உள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அவர் பதிலளிக்கையில்,
ஆம், ஆனால் அவரால் ஒரு போதும் மக்கள் ஆணையை பெற்று ஜனாதிபதியாக வர முடியாது. ஜனாதிபதியாக மட்டுமல்ல ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட வர முடியாது.
எனவே தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வைத்து தனது இலக்கை அடைவதற்கு நினைக்கின்றார்.

பசில் ராஜபக்ச இலங்கையை நேசிக்கும் நபர் அல்ல, அமெரிக்காவில் தனது சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொண்டு அமெரிக்காவின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டு அமெரிக்க அரசாங்தக்தின் கைப்பொம்மையாக செயற்படும் ஒரு நபர்.
அதுமட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தில் கூட சகோதர பாசம் இல்லாத ஒரே நபர் என்பதை தயக்கமின்றி என்னால் கூற முடியும்.

அவர் எப்போதுமே அதிகார மோகத்திலும், பண மோகத்திலும் செயற்படும் நபர். இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சகல நெருக்கடிகளுக்கும் பசில் ராஜபக்சவே காரணம்.

திட்மிட்டு பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாக கொலை செய்து அதிகாரத்தை கைப்பற்றவே பசில் திட்டம் போட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!