நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்: பொதுமக்களின் இயல்புநிலை பாதிப்பு!

நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தத்தையொட்டி சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்தியில் ஆளும் பாஜக எதிர்த்து நாடு முழுவதும் இன்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    
இன்று மற்றும் நாளை நடைபெறும் இப்போராட்டத்தில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் இவ்வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால் வங்கி, எல்ஐசி உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ள நிலையில், 12 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பொது வேலை நிறுத்தமானது இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 90% பேருந்துகள் இயங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதுமான பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் பொது வேலைநிறுத்தத்தால் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆட்டோ, கார் ஓட்டுநர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமான பங்கேற்று உள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்களும் இன்று போராட்டம் நடத்தி வருவதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!