சுட்டெரிக்கும் சூரியன்: 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்!

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மார்ச் மாதம் இந்தியாவில் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உலக வெப்ப மயமாதலும், பருவநிலை மாற்றமும் தான் உலகம் இப்போது சந்திக்கும் மோசமான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. பருவம் தவறிப் பெய்யும் மழை வெள்ளத்தால் உலகின் பெரும்பாலான நாடுகள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
    
ஆண் குழந்தை ரூ.10 லட்சம், பெண் குழந்தை ரூ.5 லட்சம் – பரபரக்க வைக்கும் ராணிப்பேட்டை குழந்தை விற்பனை அதேபோல உலகெங்கும் வெப்பமும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளை விட வெப்பம் தொடர்ந்து அதிகமாகவே பதிவாகி வருகிறது.

122 ஆண்டுகள்
கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் மோசமாகவே இருந்தது. இந்நிலையில், 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மார்ச் மாதம் இந்தியாவில் மிக அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் மாதாந்திர சராசரி வெப்பம் 33.1 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த 122 ஆண்டுகளில் பதிவான வெப்பத்தில் இது தான் மிக அதிகமாகும்.

41 டிகிரி
முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் சராசரி வெப்பம் 33.09 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. நீடித்த வறண்ட காலநிலை காரணமாகவே வடமேற்கு இந்தியாவில் கடுமையான வெப்பம் நிலவியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெப்ப அலை காரணமாக டெல்லியில் 3 இடங்களில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரியை தாண்டியது.

வரும் நாட்கள்
அதேபோல வரும் ஏப்ரல் 3 முதல் 6 வரை நாட்டில் சில இடங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வழக்கமாக மே மாதத்தில் தான் வெப்ப நிலை உச்சத்தைத் தொடும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெப்ப நிலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால், வரும் காலத்தில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கலாம் எனப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!