இடைக்கால அரசாங்க யோசனைக்கு மற்றும் ஒரு எதிர்ப்பு! உடன்பட மறுக்கிறார் சஜித் பிரேமதாச!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைக்கால அரசாங்கத்திற்கு உடன்பட மறுத்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் செயல்படும் அரசியல் மாதிரியை தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

ராஜினாமா செய்ய வேண்டும், பின்னர் செயற்படக்கூடிய ஒரு அரசியல் மாதிரியை உருவாக்கவேண்டும்.

ஒரு புதிய இலங்கையானது வலுவான நிறுவனங்களுடன் ஆரம்பிக்கவேண்டும். அன்றி தலைமைகளின் மாற்றத்தினால்; மாத்திரமல்ல.

இடைக்கால அரசாங்கம் என்பது உட்கட்சி அரசியலைத் தவிர வேறில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

காபந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவுவதற்காக முழு அமைச்சரவையும் நேற்றிரவு பதவி விலகியமை அடுத்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இடைக்கால அரசாங்க யோசனைக்கு ஜேவிபியின் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!