முழு நாட்டுக்கும் எதிர்வினையை தோற்றுவிக்கும்! மத்திய வங்கியின் புதிய ஆளுநர் எச்சரிக்கை

நாடொன்றில் மத்திய வங்கி நீதிமன்றத்தை போன்று சுயாதீனமாக செயற்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கியின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு காணப்பட்டால் அது முழு நாட்டுக்கும் எதிர்வினையை தோற்றுவிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு காலத்தில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதை தவிர்ப்பதற்கு மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட்டது.

தற்போதைய நிலைமையில் பொருளாதார மீட்சிக்காக மத்திய வங்கியும், பொருளதார துறைசார் நிபுணர்களும் முன்வைக்கும் யோசனைகளை தாமதப்படுத்தாமல் செயற்படுத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரச தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!