வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை

வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பும் போது இலங்கையின் வங்கி கட்டமைப்புகளை பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விசேட கோரிக்கையை விடுத்துள்ளார்.

கறுப்பு சந்தை ஊடாக முறையற்ற வகையில் பணத்தை அனுப்புவதை தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை பல விதங்களில் உதவி செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பலர் முன்வந்துள்ளனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் தொழில் புரிந்து வரும் இலங்கை மக்கள், உண்டியல் முறையின் ஊடாக பெருமளவில் இலங்கைக்கு பணத்தை அனுப்பி வருவதால்,இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி பெருமளவில் குறைந்துள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!